கிளிநொச்சி மக்களுக்கு இராணுவத்தினரால் மரக்கறிகள் விநியோகம்

மே 11, 2020

கிளிநொச்சி பொன்நகர், மேற்கு விசுவமடு மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு 2400 கிலோகிராம் நிறையுடைய மரக்கறி வகைகள் இராணுவத்தினால் விநியோகிக்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்னவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையரான சேனக செனவிரத்ன எனும் தனவந்தரினால் இந்த நலன்புரி திட்டத்திற்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

மரக்கறிகளை விநியோகிக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் ஒன்பதாவது விஜயபாகு படையணி, முதலாவது சிங்க படையணி, பதினான்காவது தேசிய பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளை சேர்ந்த படைவீரர்கள் படுத்தப்பட்டனர்.