தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து மேலும் 604 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 11, 2020

மூன்று வாரகால தனிமைப்படுத்தல் காலத்தில் நிறைவு செய்த மேலும் 604 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இராணுவத்தினரால் முகாமை செய்யப்படும் பூனாணி, குருநாகல் லைசியம், ஐயக்கச்சி,விடத்தல்பளை, டொல்பின் ஹோட்டல், ஹைகித்த மற்றும் இலங்கை விமானப்படையினரால் முகாமை செய்யப்படும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர், இவர்களுக்கு இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்குள்ளானதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.