பொரள்ளையில் தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இராணுவத்தினால் வினியோகம்

மே 11, 2020

பொரள்ளை பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் 30 உலர் உணவுப் பொதிகள் மற்றும் மரக்கறி வகைகள் ஆகியன வினியோகிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் இரண்டாவது பொது சேவைகள் படையணியின் கட்டளைத் தளபதியின் பாரியார் திருமதி. மாணல் தெமினியினால் இந்த நன்கொடைக்கான நிதி உதவி அளிக்கப்பட்டது.