முல்லைத்தீவில் உள்ள விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 256 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 11, 2020

மூன்று வாரகால தனிமைப்படுத்தல் காலத்தில் நிறைவு செய்த மொத்தம் 256 பேர் நேற்றைய தினம் (மே,10) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப் படையினரால் நிர்வகிக்கப்படும் இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொழும்பு குணசிங்கபுர வைச் சேர்ந்த 225 ஆண்கள் மற்றும் 31 பெண்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

இதற்கமைய 77 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 48பேர் கண்டக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மேலும் 50 பேர் முதியோர் இல்லங்களுக்கும் 30 பேர் சிரேஷ்ட பிரஜைகளை பராமரிக்கும் ரிதிகம வைத்திய சாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அத்துடன்தொழில் தகைமையற்ற மேலும் 51 பேர் தொழில் திறன்களை பெற்றுக்கொள்வதற்காக பொருத்தமான திட்டங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.