கிளிநொச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு படையினரால் வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்கிவைப்பு

மே 11, 2020

கிளிநொச்சியிலுள்ள பொன்னகர் மற்றும் கராச்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குறைந்த வருமானம் பெறும் தேவையுடைய குடும்பங்களுக்கு இலங்கை இராணுவ படையினரால் வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

'வெசாக்' வாரத்தினை முன்னிட்டு இடம்பெறும் சமய போதனைகளுக்கு அமையவும் நாடு முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பீங்கான்கள், குடங்கள், பேசின்கள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருட்கள், உலர் உணவுகள் மற்றும் ஒரு தொகை அத்தியாவசிய பொருட்கள் என்பன பயனாளிகள் மத்தியில் படையினரால் விநியோகிக்கப்பட்டது.