பூச கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மேலும் 10 பேர் விடுதலைக்கு அனுப்பிவைப்பு

மே 11, 2020

இலங்கை கடற்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் பூச தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 10 பேர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உள்ளானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதுவரை பூச கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 139 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 54 பேர் தற்பொழுது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.