தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மேலும் 175 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 11, 2020

இன்றைய தினம் தமது மூன்று வாரகால தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 175 பேர் இலங்கை விமானப்படையினரின் இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலிருந்து ஏப்ரல் 22ஆம் திகதி தனிமைப்படுத்தலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 83 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கான இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.