போரில் அங்கவீனமுற்ற பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினால் மீள பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு

மே 11, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு வினியோகிக்கவென போரில் அங்கவீனமுற்ற பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினால் மீள பயன்படுத்தக்கூடிய 100 பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ரூபாய் இரண்டு லட்சம் பெறுமதியான இந்த நன்கொடை, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், போரில் அங்கவீனமுற்ற பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ஓய்வுபெற்ற மேஜர்களான கயந்த அசேல , புன்சிரி குணரத்ன மற்றும் ஓய்வுபெற்ற கேர்ணல் வணிகசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.