சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் முனசிங்க நியமனம்

மே 12, 2020

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கதிரியக்கவியல் நிபுணர் மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   

இராணுவ மருத்துவப் படையணியின் முன்னாள் கேர்ணல் கொமடாண்ட் ஆக பதவி வகித்த மேஜர் ஜெனரல் முனசிங்க ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பழைய மாணவர் ஆவார்.   

1986 ஆம் ஆண்டு வைத்தியத்துறை பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் அதே ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.   

இலங்கை இராணுவ அகாடமியில் அடிப்படை இராணுவ பயிற்சி பூர்த்தி செய்ததை தொடர்ந்து அவர் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டனாக நியமிக்கப்பட்டார்.   

மேஜர் ஜெனரல் முனசிங்க, 2010 இல் இராணுவ மருத்துவப் படையின் கேர்ணல் கொமண்டானாகவும், 2014ம் ஆண்டில் இராணுவ சுகாதார சேவைகளின் முதலாவது பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டார்.  

மேலும் அவர் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.