இலங்கை அமைதி காக்கும் இராணுவ படையணிக்கு நடாத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்கள்" என ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவிப்பு
ஜனவரி 27, 2019ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஷ் அவர்களினால் மாலியில் இலங்கை அமைதி காக்கும் படையணிக்கு நடாத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்கள் என அறிக்கையை வெளியிட்டார் அதன் விபரங்கள் கீழ்வருமாறு;
ஐக்கிய நாட்டு செயலாளர் நாயகத்தினால் தாக்குதலுக்கு எதிராக வழங்கப்பட்ட அறிக்கையின் விபரம்
நேற்று மாலியில் உள்ள டொன்ஷா நகரில் இலங்கை அமைதி காக்கும் படையணிக்கு நடாத்தப்பட்ட பாரிய குண்டு தாக்குதலின் போது இலங்கை இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்தினால் இலங்கையிலுள்ள இந்த இராணுவத்தினரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையினர் இலக்கு வைத்து நடாத்தும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களை அமைக்கும் என்று செயலாளர் நாயகம் தெரிவித்தார். இந்த தாக்குதலின் குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கு மாலியில் உள்ள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆகையால் இந்த தாக்குதலில் சம்பந்தபட்டவர்கள் விரைவில் முடிந்தவரை நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள்.
இந்த கோழைத்தனமான தாக்குதல் நடவடிக்கை உறுதிப்பாட்டைத் தடுக்க, மாலி அரசு மற்றும் ஐக்கிய நாடு தனது உறுதிப்பாட்டிற்கு ஆதரவு வழங்கும்.
பார்ஹான் ஹக், பிரதி பேச்சாளர் செயலாளர் நாயகம்
நியூ ஜோக், 25 ஆம் திகதி ஜனவாரி மாதம் 2019
நன்றி: army.lk