கடற்படையின் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 28 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 12, 2020
14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 28 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் மன்னார் நாச்சிக்குடா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானோரே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
வீடுகளுக்கு அனுப்பப்படும் குறித்த இந்த நபர்களுக்கு அவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளானதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
தனிமைப்படுத்தலின் பின்னர் பின்னர் ஒரு தொகுதி பிரிவினர் வெளியேறியதை அடுத்து தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 22 ஆக குறைவடைந்துள்ளது.