கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி ஆரம்பம்

ஜனவரி 28, 2019

ஜப்பானிய கடல் சார் தற்பாதுகாப்பு படை (JMSDF), இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை ஆகியன இணைந்த கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி,27 ) மேற்கு ஹிக்கடுவ பிரதேச கடற்பரப்பில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நடவடிக்கையில் இரண்டு P-C3 JMSDF கடல் கண்காணிப்பு விமானங்கள், இரண்டு கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகுகள், மற்றும் இலங்கை விமானப் படை Y-12 பயன்பாட்டு விமானங்கள் ஆகியன ஈடுபடுகின்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடற்படை கண்காணிப்பு பயிற்சிகளில் சிறப்புபயிற்சி பெற்ற இலங்கை கடற்படையின் ஒரு குழுவும் இந்த ஒருங்கிணைந்த பயிற்சியில் இணைந்து செயற்படுகின்றது.

அண்மைய காலங்களில் கடற்பரப்பில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தங்களது திறன்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் வெளிநாட்டு படை வீரர்கள் பல பயிற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இப் பயிற்சிகள் மூலம் பிராந்திய சிநேக படைகளுகிடையிலான ஒத்துழைப்பு, தொழில்முறைமை, மற்றும் கூட்டுறவு ஆகியன அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.