8,099 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வெளியேற்றம்; மேலும் 3,444 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்

மே 14, 2020

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த மொத்தம் 8,099 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தற்போது நாடு முழுவதிலுமுள்ள 40 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 3,444 பேர் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.