முப்படைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஜனாதிபதி செயலணி யாழ் விஜயம்

மே 14, 2020

மேல் மாகாண ஆளுநரும், முப்படைகளில் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க தலைமையிலான குழுவினர் மே 12 முதல் 13 வரையில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள அனைத்து ஆயுதப்படை நிறுவனங்களுக்குமான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டது.

செயலணி உறுப்பினர்களின் விஜயம், இராணுவ நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரப்புவதைக் கட்டுப்படுத்துவதில் நேரடியாக ஈடுபடும் முப்படை வீரர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக அட்மிரல் (ஓய்வு) ஜெயந்த பெரேரா, மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேதா பெரேரா, ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் மற்றும் டொக்டர் கபில ஜெயரத்ன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.