மாலத்தீவிலிருந்து 350 இலங்கையர்கள் இன்று வருகை

மே 14, 2020

மாலைதீவில் வசித்து வந்த இலங்கையர்கள் பலர் இன்றைய தினம் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தகவலுக்கு அமைய சுமார் 350 இலங்கையர்கள் மாலத்தீவில் இருந்து வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.