புதைக்கப்ப்பட்டிருந்த ஆர்பிஜி, மோட்டார் மற்றும் கைக்குண்டுகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

மே 14, 2020

நேற்றய தினம் இரனைமடு, சாலை பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆர்பிஜி, மோட்டார் மற்றும் கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டன.

வடபிராந்திய கடற்படை கட்டளையகத்தினால் கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், தலா மூன்று 81 மிமீ மோட்டார் மற்றும் கைக்குண்டுகள் மற்றும் ஐந்து ஆர்பிஜிக்கள் மீட்கப்பட்டன. கடல் நீர் காரணமாக கடுமையாக சேதமாகி இருந்த இந்த பொருட்கள் கடற்படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் அகற்றப்பட்டன.