வெளிசர கடற்படை வைத்தியசாலை வெளிநோயாளர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை வசதிகள்

மே 14, 2020

வெளிசர, கடற்படை பொது வைத்தியசாலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதால், இலங்கை கடற்படை பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு நாளாந்த மருத்துவ வசதிகளைப் பெற வருகை தருபவர்களுக்காக இன்று முதல் (14) அருகிலுள்ள அரசு வைத்தியசாலை யிலிருந்து அவர்களின் மருந்து மற்றும் சுகாதார வசதிகளைப் பெற வசதி செய்துள்ளது.

புதிய ஏற்பாடுகளுக்கமைய கடற்படை ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள், சேவையிலுள்ள கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அரச வைத்தியசாலைகளின் வெளி நோயாளர்கள் பிரிவில் (OPD) மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற அந்தந்த குடும்ப சிகிச்சை பதிவு புத்தகங்களை அண்மையில் பயன்படுத்திய மருந்துகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.