கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
மே 14, 2020கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 16 திகதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நாள்தோறும் இரவு 8.00மணி முதல் காலை 5.00 மணி அமுலில் இருக்கும்.
மே மாதம் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட உள்ள ஊரடங்குச்சட்டம் திங்கட்கிழமை (18) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (23) வரை வழமை போன்று நாளாந்தம் இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டம் மறுநாள் காலை 5.00 மணி வரை தொடர உள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் வழங்கும் சிறந்த நடைமுறைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புகளை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.