வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

மே 14, 2020
உயிர்கொல்லி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 59 கடற்படை வீரர்கள், பீசீஆர் பரிசோதனைகளின் பின் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். வைரஸ் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள் தொற்று குணமானதையடுத்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
 
இவர்களில் வெளிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 44 கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸிற்கு சிகிச்சையளிக்கும் ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய கடற்படை வீரர்களும் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். வெளியேறியுள்ள இந்த கடற்படை வீரர்கள் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதற்கமைய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.