இன்று முதல் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் இல்லை - இராணுவத் தளபதி

மே 15, 2020
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, மற்றும் ஜா-எலா சுதுவெல்ல பகுதிகள் இன்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
 
மேலே உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.