226 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

மே 15, 2020
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய 226 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிசர, நுககஹவத்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (மே, 15) ஆஜர்படுத்தப்பட்டனர். 
 
ஆடம்பர வாகனம் மற்று கப் ரக வாகனம் ஆகியற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபகர்கள் வெலிசர மற்றும் ஹோமாகம பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
 
இந்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.