தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 162 கடற்படை வீரர்களின் குடும்பங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 15, 2020
இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட 162 கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தமையை உறுதிப்படுத்தும் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 
 
நேற்றைய இந்த நிகழ்வின் முலம் இதுவரை கடற்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்திக் உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது