களனி ஆற்றில் தாழ்நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு அணை கடற்படையினரால் திறப்பு

மே 15, 2020
அம்பத்தலே பகுதியில் உள்ள களனி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு அணை இலங்கை கடற்படையினரால் நேற்று (14) திறக்கப்பட்டது.
 
உலர் பருவ காலத்தில் நன்னீர் நிலைகளில் உப்பு நீர் கலந்து முழு நன்னீர் நிலைகளும் உவர் நீராக மாற்றமடைவதை தடுக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கையாக உப்பு நீர் தடுப்பு அணை அமைக்கப்பட்டது. 
 
இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் தடைகள் இயற்கையாக நீர் வழிந்தோடுவதை தடுக்கக் கூடியதாக அமைவதால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீர் அபாயத்தை எதிர்நோக்குகிறது. இதனால் இந்த வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் கடற்படை வீரர்களினால் தடுப்பு அணை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.