ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 16, 2020
ஜப்பானின் தங்கியிருந்த இலங்கையர்கள் குழு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு இன்று (மே, 16) அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 
ஜப்பானில் இருந்து வருகை தரும் இவர்கள், முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மூன்று வாரகால தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கொவிட்- 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டுக்கு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.