தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 411 பேர் வீடுகளுக்கு

மே 16, 2020
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 411 பேர் அடங்கிய குழு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் பூனானி,பெல்-வெகர ,ஒலுவில் மற்றும் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் தமது மூன்று வார தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 
வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் இவர்களுக்கு இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.