வெள்ள அனர்த்த நிலைமைகளை சமாளிக்க கடற்படை தயார் நிலையில்

மே 16, 2020
சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருகின்றது. இம் மழைவீழ்ச்சியினால் பாதிப்பு ஏற்படக்கூடும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த சமாளிக்க இலங்கை கடற்படையின்மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
வெள்ளம் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளாகதெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள இரத்தினபுரி, நாகொட, உடுகம மற்றும் தவலம பிரதேசங்களில் கடற்படையின் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.