ஜப்பான் மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து 308 இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 17, 2020
ஜப்பான் மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து மேலும் 308 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாட்டுக்கு வருகை தந்தனர். 
 
இவர்களில் 234 பேர் ஜப்பானிலிருந்தும் மீதமுள்ள 74 பேர் மியன்மாரில் இருந்தும் நாட்டிற்கு வருகை தந்ததாக கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.