மேலும் 102 பேர் அடங்கிய குழுவினர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடுகளுக்கு

மே 17, 2020
முப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 102 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் (மே, 16) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இவர்கள், மியான்குளம், மின்னேரியா, அம்பாறை, மற்றும் கடற்படை குடும்ப தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகும்.
 
வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் இவர்களுக்கான இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்குற்படுத்தப்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.