--> -->

வட கிழக்கு கடற்பரப்பில் சூறாவளி நிலைமைகள் காணப்படுவதால் மீனவ சமூகம் அவதானமாக செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மே 17, 2020

'அம்பன்' சூறாவளியானது திருகோணமலைக்கு வட கிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில்  தென் கிழக்கு வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த “அம்பன்” சூறாவளியானது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் பாரியசூறாவளியாக விருத்தியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதுடன் புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது கடல் நிலை கணமாக அமையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.