நாடு திரும்புவதற்கு முடிவெடுக்கும் முன்னர் தொழில்மற்றும் கல்வியின் மீதான விளைவுகளை மதிப்பீடு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கோரிக்கை

மே 17, 2020
  • நாடு திரும்புவதற்கு முடிவெடுக்கும் முன், வேலைகள் மற்றும் கல்வியின் மீதான விளைவுகளை மதிப்பீடு செய்க
  • நாடு திரும்ப உதவி கோரியுள்ள 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களில் 28,000 பேர் வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்கள்

நாடு திரும்புவதற்கான இறுதி முடிவினை எடுக்கும் முன்னர் தமது தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதன் விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்து கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத ஆரியசின்ஹ கோரிக்கை விடுத்துள்ளார். கட்டாய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்காக வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் மாத்திரமே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பாத்திரத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் இலங்கை தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை ரூபவஹினி தொலைக்காட்சியின் 'நிவ்ஸ் அட் 9' செய்திச் சேவைக்கு அளித்த விஷேட செவ்வியின் போதே அவர் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது