போர் வீரர்களை நினைவு கூர்ந்து நாளை இடம்பெறவுள்ள தேசிய நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மே 18, 2020
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கவும், நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த மிலேச்சத்தனமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய போர் வீரர்களை நினைவுகூர்ந்து நாளை இடம்பெறவுள்ள தேசிய நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. போர் வீரர்களை நினைவு கூறும் இந்த தேசிய நிகழ்வு பத்தரமுல்ல தேசிய போர் வீரர்கள் நினைவுத் தூபி வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
 
போர் வீரர்களை நினைவுகூர்ந்து இடம்பெறவுள்ள இந்த தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், மேல் மாகாண ஆளுநர், அட்மிரல் ஒப் த பிளீட், முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், அரச அதிகாரிகள், போரின் போது உயிர் நீர்த்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
போர் வீரர்களை நினைவுகூறும் இந்த தேசிய நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துதல், வீர காவியம் வாசித்தல், சர்வமத நிகழ்வுகள், 'ரண பெர' ஒலி, ஜனாதிபதியின் உரை, நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி சாத்துதல் மற்றும் வான்வழியாக பூக்கள் சொரிதல் ஆகியவை இடம்பெறவுள்ளன.
 
நினைவு தின விழாவுடன் இனைந்ததாக, இலங்கை இராணுவத்தின் பதவி உயர்வுக்கு தகுதியான 14,617 படைவீரர்கள் அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.