வேதரை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு படையினரால் மறு சிரமைப்பு

மே 19, 2020

வேதரை கிராமிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைகள் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகள் கடந்த வியாழனன்று (மே, 14) நிறைவு செய்யப்பட்டது.

வெளிநோயாளர் பிரிவை திருத்தியமைத்து தருமாறு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் மகேந்திர ஏக்கநாயக்கவினால் இலங்கை இராணுவத்தினரிடம் விடுக்கபபட்ட வேண்டுகோளுக்கு அமைய திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.