பேங்கோக் நகரிலிருந்து 69 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

மே 19, 2020

பேங்கோக் நகரிலிருந்து 69 இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் நேற்றய தினம் (மே, 17) நாட்டிற்கு வருகை தந்தனர்.

இவர்கள், மாலைதீவு விமான சேவைக்கு சொந்தமான Q2 6351 விமானத்தின் நேற்று மாலை நாடு திரும்பினர்.

வருகை தந்த இவர்களுக்கு, முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மூன்று வார காலம் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.a