இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - பாதுகாப்பு செயலாளர்
மே 19, 2020தீவிரவாத சக்திகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக சமூக ஊடகங்களில் உலாவ செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகின்றது.
" சமூக ஊடகங்களில் வலம்வரும் செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக எந்த தகவல்களும் புலனாய்வு அமைப்புக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை" என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுதுவதில் படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தல் படாமல் இல்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்
நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும், உள்ளக மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உஷார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளும் அதேவேளை, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க குறித்த எண்ணிக்கையிலான இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அவசியம என அவர் தெரிவித்தார்.
"இலங்கை கடற்படை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடுகையில், உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்காணிக்கும் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்துகிறது. இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் பயங்கரவாதத்தின் எந்த ஒரு வடிவத்தையும் எதிர்கொள்வதிலும் ஈடுபட்டுள்ளது "என அவர் தெரிவித்தார்.