10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மே 19, 2020

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தேசிய கட்டடவியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   

இந்த எச்சரிக்கை, காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, குருநாகல், மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களிலும் இன்று 2.00 மணி அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்ப்பெற்ற மழைவீழ்ச்சி 75 மில்லி மீட்டருக்கும் அதிகம் என்பதால் மண்சரிவுகள், சாய்வுச் சரிவுகள், மலையிலிருந்து கற்கள் புரளுதல், மலை இடுக்குகளில் நீர் வெளியேறுதல், வெடிப்புக்கள் ஏற்படுதல் மற்றும் தரையிறக்கங்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டடவியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.