காலி, வக்வெல்ல பாலத்தைச் சுற்றியுள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்

மே 19, 2020

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மழை வீழ்ச்சியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்படும் வெள்ள நிலைமைகளை தடுக்கும் நோக்கில் காலி, கின் கங்கையின் வக்வெல்ல பாலத்தைச் சுற்றியுள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர்.   

பாலத்தைச் சூழவுள்ள பகுதிகளில் குப்பை கூளங்கள் அடைபட்டு காணப்பட்டதனால் கின் கங்கையின் நீரோட்டம் தடைபட்டு அது சூழவுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்திற்கு காரணமாக அமைந்தது.    

இதனை தடுக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளையாகத்தின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கசப்பா போலின் பணிப்புரைக்கு அமைய கடற்படை வீரர்களினால் இப்பணி முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.