ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 60,000 ற்கும் அதிகமானோர் கைது

மே 20, 2020

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய சுமார் 60,000 ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 20ம் திகதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணினை 60,000 ஐயும் தாண்டியுள்ளது. இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியாலங்களில் மேலும் 660 பேர் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதன் பேரில் 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 16,924 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை பொலிஸ் வண்மையாக எச்சரித்துள்ளது.