இரு தொகுதி இலங்கையர்கள் குவைத்திலிருந்து வருகை

மே 20, 2020

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான KU1453 விமானத்தின் மூலம் 179 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் அழைத்து வரப்பட்டதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் சமிந்த ஐயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற் கருத்து வெளியிட்ட அவர் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றையதினம் குவைத் நாட்டிலிருந்து
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான KU1451 விமானத்தின் மூலம் 179 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைந்து வரப்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் கடமையிலுள்ள விமானப்படை வீரர்களினால் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.