வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

மே 20, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தேவையுடைய மக்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கவென வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட இந்த நன்கொடைப் பொருட்களை பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் இன்று காலை (மே,20) கையளித்தார்.

பாதுகாப்புப் படைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், இந்த முக்கியமான சூழ்நிலையிலும் வறிய சமூகங்களுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் கிருஷாந்த ஹலம்பராச்சிகே தெரிதவித்தார்.

இந்த நிகழ்வில், வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் வசப ஜயசேகர, பணிப்பாளர் கிருஷாந்த ஹலம்பராச்சிகே, சந்தைப்படுத்தல் முகாமையாளர் கசுன் நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர்.