இந்தோனேசியாவிலிருந்து 110 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

மே 21, 2020

இந்தோனேசியாவின் தேசிய விமான சேவைக்குச் சொந்தமான GA 9820 விமானத்தின் மூலம் 110 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ருவன் பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்தவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் உள்ள விமானப்படை வீரர்களினால் தொற்று நீக்கள் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.