நலன்புரி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் ஜனாதிபதி உத்தரவு தொடர்பாக யுத்த வீரர்கள் சங்கத்திற்கு தெளிவு படுத்தல்
மே 30, 2019யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோருக்கான நலன்புரி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக யுத்த வீரர்கள் சங்கத்திற்கு தெளிவுபடுத்தும் கூட்டம் இன்று (மே,29) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த இக்கூட்டம் பொது நிர்வாக, உள்துறை அமைச்சின் செயலாளர் திரு. ஜே.ஜே. ரட்ணசிறி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு பிரத்தியேக செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் சனத் வீரசூரிய அவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கான ஊதியம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் வழங்குமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை தொடர்பாக உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றது. அத்துடன் குறித்த வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க பிரதிநிதிகளுடன் பயனுள்ள பல விடயங்கள் தொடர்பாக அதிகாரிகள் கலந்துரையாடினர்.
நிதி அமைச்சு, ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் முப்படைகளின் நலன்புரி பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியின் தற்போதைய முன்னேற்றம், யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் செயல்முறைகளை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பாக விளக்கமளித்தனர்.