சூறாவளியினால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடிப் படகுகளுக்கு கடற்படையின் சமுத்ர கப்பல் உதவி

மே 21, 2020

அண்மையில் ஆழ்கடலில் பல நாள் மீன்பிடிக்காக சென்றிருந்த வேளை சூறாவளி தாக்கத்தின் காரணமாக இந்தோனேசிய கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் நிர்கதியாகியுள்ள மீன்பிடி படகுகளை நாட்டிற்கு அழைத்து வர இலங்கை கடற்படையின் சமுத்ர கப்பல் பயணமாகியுள்ளது.

அம்பன் சூறாவளி காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நாட்டிற்கு தற்போது அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் மேம்படுத்தப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் குறித்த மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அழைத்து வர உதவியளிப்பதுடன் அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்றடையும் வரை படகுகளுக்கு தேவைப்படும் எரிபொருளையும் அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.