கொரோனா வைரஸ் நோயாளிகள் 604 பேர் குணடைவு

மே 21, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 604 அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (மே, 21) வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 20 பேர் குணமடைந்து வெளியேறியதையடுத்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ள அதேவேளை 417 பேர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.