மே 24,25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு
மே 22, 2020எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வழமைபோன்று இரவு 8.00மணிக்கு அமல்படுத்தப்பட்டு மறுநாள் காலை 5.00 மணி வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்தோறும் அமல்படுத்தப்படும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் இந்த ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியில் இயல்புநிலை அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், மே, 23 மற்றும் 26 ஆகிய திகதிகளில் செயற்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு தொடரும் எனவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் நிபந்தனைகள் மாறாமல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.