வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்
மே 22, 2020கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிவாரண நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான இராணுவ உதவி எனும் இராணுவத்தின் படை சாரா வகிபாகத்தின் (non-military role) ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 18 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை கொண்டுவரப்பட்டுள்ள பகுதிகள், சீரற்ற வானிலையினால் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் ஆகியன இடம்பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேசத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு, மத்திய பாதுகாப்புப்படையின் 11 ஆவது பிரிவின் 116 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தின் மூன்றாவது சிங்க படையணியைச் சேர்ந்த படைவீரர்களினால் வெள்ள நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணியாளர்களுக்கும் படையினர் ஒத்தாசை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள், மத்திய பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்த்தா, 11 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார 111 வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி ஆகியோரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இதேபோல், கேகாலை பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக நிலத்தில் புதையுண்ட பெண் ஒருவரை 61வது பிரிவின் 611 பிரிகேட்டைச் சேர்ந்த
8 வது சிங்க படையணியின் படைவீரர்கள் காப்பாற்றியுள்ளார்கள்.
இதேவேளை, மேற்கு பாதுகாப்பு படைத் தலமையகத்தின்
61வது பிரிவின் 613 பிரிகேட்டைச் சேர்ந்த
20வது சிங்க படையணியின் படைவீரர்கள், மாத்தறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிரதான வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் எல்பிட்டிய பிரதேசத்தில் சேதமடைந்த 34 வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.