வெடி பொருட்கள் விநியோக வழிமுறை தொடர்பான அறிவித்தல்

மே 29, 2019

நாட்டில் நிலவிய பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு சபையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெடிபொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெடிமருந்துகளின் அளவு மாவட்டச் செயலாளரினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய வர்த்தக ரீதியான வெடிபொருட்கள், துப்பாக்கிள் மற்றும் ரவைகள் கொள்வனவு பிரிவு (Commercial Explosive Fire Arms Procurement Unit – CEFAP) என்ற நிறுவனத்தின் ஊடக பெற்றுக் கொள்ள முடியும்.

பாறைகள் தகர்ப்பு மற்றும் அகழ்வு தொடர்பான கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் வெடிபொருட்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக அனுமதிபெற்றவர்கள் அந்த அனுமதி பத்திரங்களை மாவட்டச் செயலகங்களில் சமர்பித்து தேவைப்படும் வெடிபொருட்களை இதற்குப் பின்னர் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
1. சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகங்கள்
2. வர்த்தக ரீதியான வெடிபொருட்கள், துப்பாக்கிள் மற்றும் ரவைகள் கொள்வனவு பிரிவு(CEFAP)- 011 2958 227
3. பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவு - 011 2335 798