260 இலங்கையர்கள் ரஷ்யாவில் இருந்து வருகை

மே 23, 2020


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாயகம் திரும்புவதில் இன்னல்களை எதிர்நோக்கிய இலங்கையர்கள் அடங்கியுள்ள குழுவினர் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தனர்.

குறித்த நாட்டில் வசித்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

நாட்டிற்கு வருகை தந்த இவர்கள், முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.