கொரோனா வைரஸ் 620 பேர் சிகிச்சையின் பின் வெளியேற்றம்

மே 23, 2020

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 620 பேர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 11 கடற்படை வீரர்கள் உட்பட மேலும் 13 தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளங் காணப்பட்ட தொற்றாளர்களுடன் சேர்த்து இதுவரை நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,068 ஆக பதிவாதியுள்ளது.