கொவிட் -19 கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் இலங்கையை பாராட்டிய இந்தியா

மே 23, 2020

- ஜனாதிபதி கோட்டபாய தலைமையின் கீழ் கொவிட் -19 கொரோனா வைரஸ்  ஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை ஒழிப்பதற்கும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டபாயவினால் வழங்கப்பட்ட தலைமைத்துவத்தையும் இதன்போது அவர் பாராட்டினார்.

இன்று (மே 23) ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவர்  வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், கொரோனா தொற்றுநோய் மற்றும் அதனுடனான பொருளாதார தாக்கத்தை கையாள்வதில் அதன் நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுக்கு உதவும் வகையில்   இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதை பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த நாம் உடன்பட்டுள்துடன், முதலீடு தொடர்புகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .