ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 64,000 க்கும் அதிகமானோர் கைது

மே 25, 2020

மார்ச் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 64,000 க்கும் அதிகமானோர்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 18,169 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (மே 25) காலை 6.00 மணியுடன் முடிவடையும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சுமார் 1710 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 557 வாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பதிவுகளின் பிரகாரம் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீரிய 20,497 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.